கட்டுரை ஆசிரியர் திரு ஜான் பீட்டர், தாளவாடி
சென்றவாரம் வேலுதரன் சாரின் வலத்தளத்தில் ( blog ) ல் கலியூர் அப்ரமேயன் பற்றிய பதிவை பாரத்து ஒரு ஆர்வலர் அதைப்பற்றி விசாரிக்க அவர் என்னை தொடர்பு கொள்ள கூறியதால் அவரும் நானும் அலை பேசியில் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம். ரமேஷ் என்னும் அந்த சென்னையைச் சேரந்த மென்பொறியாளர்
தான் பணி புரிந்து வந்த தனியார் வங்கி பணியை இராஜினாமா செய்து விட்டு சோழரின் போர்தடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வட இந்தியாவின்
கங்கை,வங்காளம் பின் ஒரிசா கேரளம் ஆந்திரா என இராஜேந்திரனின்
படையெடுப்பு நிகழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்து தற்சமயம் கர்நாடகா வருவதாகவும்
பின்னர் தெற்காசிய பிராந்தியமான மலேசியா சுமத்ரா, இந்தோனேசியா வரை சென்று சோழர்களின் போர் தடயங்களை கண்டு ஆய்வு மேற்கொள்ள போவதாக கூறி என்னைஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்..
அவரை நேரில் காண ஆவலுற்ற நான் சத்தி- சாம்ராஜ நகர் செல்லும் நெடுஞ்சாலையில்
சிக்கஹொளெவில் மாலை 4 மணிக்கு சந்திப்பதாக தெரிவித்திருந்தேன் அரை மணி நேர காத்திருப்பிற்க்கு பின்னர் வந்த அவருடன் இணைந்து சாம்ராஜ்நகரை தாண்டி கெம்பணபுராவை
நோக்கி விரைந்தோம் கெம்பணபுரா கர்நாடக வரலாற்றில் மட்டுமல்லாது சோழ வரலாற்று முழுமைக்கும் முக்கிய அங்கம் வகிக்கும்
ஊராகும். நான் அந்த பகுதிகளில் அடிக்கடி சென்று கொண்டிருப்பதால் சிரமமேதுமின்றி
அவ்வூரை அடைந்தோம் ஊரின் நடுவே பஞ்சாயத்து அலுவலகத்தின் முன் பெரும் கும்பல் நின்றிருந்தது அவர்களிடம் கோயிலைப்பற்றி விசாரித்தால்
தேவையற்ற கேள்வி குழப்பமேற்படலாம் என ஐயமுற்று அருகே சிறிய பெட்டிக்கடை
யின் முன் அமர்ந்திருந்த முதியவரிடம் எனது வழக்கமான உரையாடல் பாணியில் கோயிலைப் பற்றி விசாரித்தேன்
அவரும் "மூல்னேஸ்வரா
தேவஸ்தானமா? என பதிலுரைத்து கோயிலுக்கு செல்லும் வழியைக் கூறத் தொடங்கினார்
நான் இடைமறித்து எங்கள் கூட வரும்படியழைத்தேன் சிறிது தயக்கத்திற்க்கு
பின்னர் வண்டியில் எங்களுடன் அமர்ந்து வழிகாட்டினார். நாங்கள் ஊருக்கு சற்று வெளியே ஏரிக்கரை, வயல்வெளிகளின் ஊடாக சென்று ஒரு ஒத்தையடிப்பாதையில் காரைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம். அங்கு தென்னந்தோப்பு
மத்தியில் பாழடைந்து கிடந்த அக்கோயிலைக் கண்டோம்..
கோயிலுக்குரிய ஆகம கட்டிட அமைப்பு ஏதுமின்றி கோபுரமும் இல்லாது இடிந்த மண்டபம் போன்று காட்சி தந்தது முன்புறம் உடைந்த தூண்கள் சிதறி கிடந்தது சிறிய நுழைவாயிலையடுத்து தூண்கள் தாங்கிய அர்தமண்டபம் அதனையடுத்து
சிறிய அளவிலான கருவறை மூலவரான லிங்கம் வழக்கமான கர்நாடக கோயில்களில்
காணப்படும லிங்கம் போலன்றி சற்று பெரிய அளவில் பிரமாண்டமாய் சோழர் கால கோயில்களில் காண்பது போன்று காட்சி தந்தது.. எதிரே அர்தமண்டபத்தில் சிறிய அளவிலான நந்தி பகவான் நின்ற நிலை சந்திரனின் திருமேனி ஆகியவை காணப்பட்டன.. கருவறையை நெருங்க முடியா வண்ணம் வௌவால்கள் கூட்டம் முகத்துக்கு நேராக பறந்துவந்து
பயமுறுத்தின அநேகமாக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சோழர்கால கோயில்களிலே பழமையன இக்கோயிலின்
நிலையைக் கண்டு மனம் கலங்கினோம்...
கெம்பணபுரா -:தென்கிழக்காசியத்தின் திக்கு வரை தன் கிளைகளை பரப்பிய சோழமெனும் விருட்சத்திற்க்கு கர்நாடகத்தில் விதையூன்றப்பட்ட நிலமிது. தஞ்சையம்பதியின் சிவபாதசேகரன் கங்கபாடியின் சோழ நாராணயனாய் உருவெடுத்த ஊர். கெம்பணபுரா! திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிக குழுவின் 11 ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு இவ்வூரை " முடி கொண்ட சோழ மண்டலத்து கங்கை கொண்ட சோழ வளநாட்டு பதி- நாட்டு வேலூரான ராஜாதிராஜசதுர்வேதிமங்கலமென்று குறிப்பிடுகிறது
பின்னர் இவ்வூர் வணிக குழுக்களின் பாதுகாப்பிற்காக்
படைகள் தங்கும் முகாம் ஏற்படுத்தப்பட்டு எரிவீரபட்டினம்
என பெயர் மாற்றம் பெற்றதையும் கூறுகிறது அக்காலத்தே இன்றைய சாம்ராஜ்நகரம்-
கொள்ளேகால் செல்லும் சாலை வணிக குழுக்கள் பயணப்பட்ட பெருவழி பாதையாகவும்
அவ்வாறு செல்லும் வணிகர்களுக்கும் அவரது வியாபாரப் பொருட்களுக்கும் பாதுகாப்பிற்காக வணிக குழுக்கள் ஏற்படுத்திய படைவீர்ர்கள்
தங்குமிடமாக இந்த எரிவீரபட்டினம் திகழ்ந்தது எனலாம் இந்த
பெயரே கன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்து கெம்பணபுராவாகியது என கருதலாம் ( கெம்பு -,எரியும் நெருப்பு சிவப்பு வண்ணத்தை குறிப்பது)
சோழநாராயணனின் ஹள
கன்னட மொழிகல்வெட்டு;- மூலஸ்தானேஸ்வரர் கோயிலை கண்ட பின்னர் அங்கு ஆவணத்தில் குறிப்பிட்ட இராஜராஜனின்
ஹள கன்னட மொழிகல்வெட்டை தேடினோம் முதலில் ஒரு கல்வெட்டை கண்டு அதனருகே சென்று பார்த்ததில்
அது நாகரி மொழி கல்வெட்டு 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறிந்து கொண்டோம் பின்னர் சிறிய தேடலுக்கு பின்னர் அந்த இராஜராஜனின் கன்னட மொழி கல்வெட்டை கண்டறிந்தோம் பெரும்பாலும் பாசி படிந்திருந்த்தும் ஒரு சில ஹள கன்னட எழுத்துக்களை கண்டு அவை 10ம்நூற்றாண்டை சேர்ந்தது என அடையாளங் காண முடிந்தது
கல்வெட்டு வரிகள்-;
பதினைந்து வரிகள்
கொண்டது1.ஸ்வஸ்திஸ்ரீ விமலாயஸ ப்ரஸ்திஆதன அனுபமித குணகாண2. வாசம் சதாவிஸ்தார ஆதன கிலமஹிப்ரஸ்து தானநென நெகுலதா சோளநா3.ராயணன விஜயராஜ்யா பிருவித்தி சுகசங்கதா வினோத4. தம் சளுகதமிரே சகருபகால அந்த சம்வஸ்தரஹங்க 913 கரசம்5. வத்ஸம் ப்ரவர்தி சுத்துரே சத்வாச அப்யந்தரத பௌஸ்ய மாசத6.....உத்தராயணசங்கிராந்தி யத்துவேஸ்வ7.ரண்யவத ஸ்ரீ சோமரசிபட்டரகர்கே கல்லூரி பல ...........15.சுந்தராம் ஷஷ்டிண சர்சஹஸ்ராணி நிஸ்வாயாம் ஜாயதெ
கிரிமி -;
கல்வெட்டு
செய்தி-;செழிப்பும் வளமுடையதுமான
விஜய ராஜ்ஜியத்தின்
வெற்றி வேந்தன்... நற்கீர்த்தியினன்.. ஒப்புயர்வற்ற எண்ணிலடங்கா
நற்குணங்களை தன்னகத்தே கொண்டு நாளும் பல்கி பெருகும் நற்பண்புகளின் பிறப்பிடம் தானடைந்த புகழினால் அரசர்களெல்லாம்
தன் தாள் நிழலையடைந்து வணங்கி நிற்கும் படியான அரசரகளுக்கெல்லாம் அரசன் சோழநாராயணின் ஆட்சியில் இப்புவியெங்கும்
நல்லமைதியும் ஞானமும் நிறைந்திருந்தது.. சக வருஷம் 913 காரா புஷ்ய மாதத்து உத்திராயண சங்கிராந்தியன்று (டிச.24. பொ.யு.991) கல்லூரை சேர்ந்த பொல்லேயா கிரிஹெரூரிலுள்ள நஞ்சை பூமியில் 2கந்துகா நிலத்தையும்
நந்தவனம் மற்றும் போகினூரிலுள்ள நெல்லிகுண்டு என்னுமிடத்தில்
10 கந்துகா அளவுள்ள நிலத்தை இறையிலியாக கல்வி கொடையாகவும்( வித்யாதனம்) அடியார்களுக்கு
உணவு அளிக்கவும் , கோயில் புனரமைப்பு பணிக்காகவும்
தானமாக வழங்கி இந்த அறப்பணியை மேற்கொள்ள சிவாச்சாரியார் ஸ்ரீ சோமராசி- பட்டாராகாவை நியமித்ததையும் இக்கல்வெட்டு
உரைக்கிறது
இங்கு சோழ நாராயணன் எனக்குறிப்பிடுவது நமது இராஜராஜனைத்தான் சகவருடம் 913 என்பது பொ.யு. 991 ஆறாவது ஆடசியாண்டுஇராஜராஜனின் 8 ம் ஆட்சியாண்டு முதலாகத்தான் மெய்கீர்த்தி
பயன்பாட்டிற்க்கு வந்ததை அறிகிறோம்
பின்னர்மாளம்பி கல்வெட்டு குறிப்பிடம்1004 குடகு ஹனசோகேவில் மனீஜா தலமையில் கொங்காள்வாருடன்
போர் 1006ல் அப்ரமேயன் தலமையில் 18 தளபதிகளுடனான
கலியூர் போர் பின்னர் இராஜராஜனின் 29 வது ஆட்சியாண்டு 1012 பெலகுலா நாட்டின் மீது இராஜேந்திரன் மேற் கொண்ட தாக்குதல் (பலமூரி கல்வெட்டு) இவ்வாறு இராஜராஜனின் 6 வது ஆட்சியாண்டு முதல் 29 வது ஆடசியாண்டு வரை மைசூர், அதனை சுற்றியுள்ள கங்க நாட்டிற்கு உட்பட்ட பகுதிகளை ஆட்சி
செய்து வந்த கங்கர், சாளுக்கியர் நுளம்பர் கொங்காள்வார்,ஹொய்சாளர் தங்களது பகுதியைக் சோழர்கள் கவர்ந்து கொள்வதை தடுக்க போராடியதும் கங்கபாடியை கைக்கொள்வது அவ்வளவு சுலபமாக நடந்தேறவில்லை என்பதும் மேற்கண்ட சான்றுகள் துணை கொண்டு அறிகிறோம்
மூலஸ்தானேஸ்வரர் கோயிலை கண்ட பின்னர் அங்கு ஆவணத்தில் குறிப்பிட்ட இராஜராஜனின்
ஹள கன்னட மொழிகல்வெட்டை தேடினோம் முதலில் ஒரு கல்வெட்டை கண்டு அதனருகே சென்று பார்த்ததில்
அது நாகரி மொழி கல்வெட்டு 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறிந்து கொண்டோம் பின்னர் சிறிய தேடலுக்கு பின்னர் அந்த இராஜராஜனின் கன்னட மொழி கல்வெட்டை கண்டறிந்தோம் பெரும்பாலும் பாசி படிந்திருந்த்தும் ஒரு சில ஹள கன்னட எழுத்துக்களை கண்டு அவை 10ம்நூற்றாண்டை சேர்ந்தது என அடையாளங் காண முடிந்தது
No comments:
Post a Comment