29 January 2022

மல்லேஸ்வரர்திருக்கோயில், வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் நந்திகுந்தா, நஞ்சன்கூடு, கர்நாடகம்

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்
தாளவாடி
 
கர்நாடகத்தில் சோழர் தடயங்களை தேடும் படலத்தில் இம்முறை நாம் பயணித்தது இராஜேந்திர சோழனின் முயங்கி படையெடுப்பு குறித்த முக்கிய சான்றினை கூறும் கல்வெட்டைத் தேடி.. மைசூரிலிருந்து கிழக்காக 23 கி.மீ.தொலைவில் நஞ்சன்கூடு தாலுகாவில் அமைந்துள்ளது நந்திகுந்தா பஞ்சாயத்து கிராமம். இங்கு சென்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மல்லேஸ்வரர் கோயிலை கண்டறிவதில் யாதொரு சிரமும் இருக்கவில்லை! ஆனால் தற்போது இக்கோயில் மல்லிகார்ஜூனசுவாமி கோயில் என்று பெயர் மாற்றம் பெற்றிருந்தது!


கோயில் அமைப்பு-:
சோழர் கால பழைய கோயிலை முற்றிலும் இடித்து புதிதாக கோயில் தமிழகத்தில் காணக்கிடைக்கும் தற்கால கோயில் பாணியை போன்று கட்டப்பட்டிருந்தது. முகப்பு தோரணத்துடன் கூடிய வாயில் மண்டபம், அதனையடுத்து சற்று விசாலமான வெளிமணடபம்,நடுவே கருவறை உள்ளே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூலவராக லிங்கம் கருவறையின் மேற்புறம் உச்சியில் பித்தளை கலசங்கள் கொண்ட விமானம் அமைத்து நவீனதுடன் காட்சி தந்தது! வெளிப்புறத்தில் கோயிலின் பழைய புகைப்படம் (இடிக்கப்படுவதற்கு முன்புலேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது, அவை இப்பகுதியில் நாம் சென்று பார்த்த ஏனைய சோழர் கால கோயில்கள் போன்றே கோயில் ஆகம கட்டிட உறுப்புகள் ஏதுமின்றி மண்டபம் போன்று காட்சி தருகிறது




கல்வெட்டு மற்றும் வரலாறு...
முன்புற வளாகத்தில் 3 அடி உயரமும் 4அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் இரு புறமும் கல்வெட்டு பொறிக்கப்பட்ட நிலையில் நடப்பட்டுள்ளது!

கல்வெட்டுமுன்புறம்
1. திரு மன்னி வளர.....
17.செம்புத் திருதகு முடியும் பயங்கொடு
18.பழமிக முசங்கியில் முதுகி(டொளி)
19.ஜெயசிங்கனாள.........வா(டி)..

கல்வெட்டு பின்புறம் -:
20. தேரி சகவருஷம் 943
21.ரௌத்ர சம்வத்சரத பால்குன மாசதா சுக்ல
22.பக்ஷம் புதவாரம் புன்னனமே உத்தரநட்சத்திரம் சோ
23. கிரஹணதந்து எட தொரே நாடுள் பதி நீ
24.க்கி மைஅனாட நந்திகுந்தாத எணகொகும்ப
25.ய்யண மாகம் மல்லிகாவுண்டனும் எரெமனு
26.கும்பயனு மாடிசித மல்லேஸ்வரகேம
27.ல்லி காவுண்டம் பிட்ட தேவது தேவுதபடா
28.கணதெசயொந்துபாலிமத்த மதர கொலகே
29.மூடபலகளல்லி கிரியபாளயம் மல்லிகா
30.உண்ட பிட்ட தேவதித்தி தேவலககங்கே பிட்டிது மத்த
31.மெரடுநந்த திவிகேயும் நிலலெக்கம் மெரந்து போ
32.ல்து நிவேத்யமும் கரகாண தென்னயுமி
33.நிசுவபிட்டம் மாவனு மஅளியனும்மாடி
34. .......லேஸ்வரகே......காவுண்டபிட்டநிந்தி...
35......நிதி..

கல்வெட்டு செய்தி-:
கல்வெட்டில் அரசன் பெயர் குறிப்பிடவில்லை! இருப்பினும் "திருமன்னி வளர"என்ற மெய்கீர்த்தியுடன் தொடங்குவதால் இராஜேந்திர சோழனின் காலத்தியது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைதமிழ் மெய்கீரத்தி ஹளகன்னடமொழி வரி வடிவில் எழுதப்பட்டுள்ளதால் பிழைகள் மலிந்து காணப்படுகிறது!. சக.943. பங்குனி மாதம் புதன்கிழமை, உத்திர நட்சத்திரம், சந்திர கிரகணம் அன்று இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது ஆங்கில வருடத்தில் மார்ச் மாதம் 1 தேதி பொ.யு.1021. மைசூ நாடு நந்திகுந்தா ஊரைச்சேர்ந்த எணெகாரகும்பய்யா என்பவனின் மகன் மல்ல காவுண்டா மற்றும் ஏரமா, கும்பய்யா ஆகியோர் இக்கோயிலையெடுப்பித்து கோயிலை பராமரிக்கவும் நுந்தா விளக்கெரிக்க செக்கு கல்லையும் தானமாக வழங்கிய செய்தியை கூறுகிறது. அக்காலந்தொட்டு இவ்வூர் நந்திகுந்தா என்ற பெயரிலே வழங்கிவருவது சிறப்பு!


இடைதுறைநாடு, முயங்கி போர்-:
கல்வெட்டின் முன்புறத்தில் "திருமன்னி வளர என தொடங்கும் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி முயங்கியில் ஜெயசிம்மனை புறமுகிட்டு ஓடச்செய்ததை குறிப்பிட்டவுடன் நின்று அதன் பிறகு அடுத்து பின்புறத்தில் இடைதுறைநாடுள்- பதிநீக்கி எனத்தொடங்குவது ஒரு முக்கிய வரலாற்று குறிப்பை கொடுப்பதாக கர்நாடக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர் அதற்கு முன்னர் இராஜேந்திர சோழனின் முயங்கி போர் இடைதுறைநாடு வெற்றி ஆகியவற்றை குறித்து பார்ப்போம்!

கிருஷ்ணா நதி, துங்கபத்திரா பேராறுகளுக்கிடையிலான பகுதி இடைதுறைநாடு எனப்படும் இது மேலை சாளுக்கிய தேசத்தின் ஆட்சிக்குட்ப்பட்ட பகுதியாக திகழ்ந்தது இராஜேந்திரன் சோழ மண்டலத்து இளவலாகவும் பின்பு பேரரசராக பொறுப்பேற்றவுடன் பெற்ற முதல் வெற்றி இடைதுறைநாடு நாட்டு வெற்றியாகும். பின்னர் இராஜேந்திர சோழன் தெற்கு பகுதியில் பாண்டியர்கள் மற்றும் ஈழத்தின் மீதும் தனது கவனத்தை செலுத்தியும் இருந்த நல் வாய்ப்பினை பயன் படுத்தி கொண்ட மேலை சாளுக்கியன் இரண்டாம் ஜெயசிம்மன் கீழை சாளுக்கியர் விவகாரத்தில் தலையிட்டு தனது ஆதரவாளலான விஜயாதித்தனை வேங்கி அரியணையில் அமர்த்தினான் இதனால் வெகுண்டெழுந்த இராஜேந்திர சோழன் தனது தங்கை குந்தவை மகனான இராஜராஜநரேந்திரனை அரியணையில் அமர்த்த நினைத்து மேலை சாளுக்கியத்தின் மேல் பெரும்படையெடுப்பை நிகழ்த்தினான் முயங்கியில் போர் மூண்டது முயங்கி என்பது தற்போதைய கர்நாடக மாநிலத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் மத்தியில் அமைந்துள்ள மாஸ்கி என்ற ஊராகும் இப்போரானது இராஜேந்திரனின் 9 வது ஆட்சியாண்டு அதாவது பொ.யு.1020 ஆண்டு கடைசியில் அல்லது பொ.யு1021 தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் நடைபெற்றிருக்க வேண்டுமெனவும் இவ்வெற்றியை அவை புலவர்கள் மெய்கீர்த்தியில் இணைத்து ஆவணத்தில் பொறிப்பதற்க்கும் இரண்டு மூன்று மாத கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்து இடைதுறைநாடுள் -பதிநீக்கி என்ற பதத்தில் இடைதுறைநாட்டில் எழுந்த குழப்பத்தை நீக்கி நிலையான ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்துச் அமைதி நிலவச் செய்ததையும் குறிப்பிடுவதையும் கருத்திற் கொள்ள வேண்டும். மேலும் இக்கல்வட்டு அமைந்துள்ள மைசூர் நாட்டிலும் காவிரி ஆற்றின் தென்கரை பகுதி இடைதுறைநாடு என அழைக்கப்பட்டிருந்தாலும் இப்பகுதியானது இராஜராஜ சோழனின் காலத்திலே பொ.யு.1004 ஆண்டு வாக்கிலே சோழர் கைவசத்தில் இருந்தது எனவும் கிட்டதட்ட நூற்றாண்டுகளுக்கு மேலாக குழப்பமின்றி ஆட்சி நிர்வாகம் நடைபெற்றதால் இது மேலை சாளுக்கிய தேசத்தின் இடைதுறைநாட்டைதான் குறிப்பிடுகிறது என்பது கர்நாடக வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்தாகும்.