14 January 2020

சாம்ராஜ்நகரத்தின் சமணர் கோயில் - கர்நாடகமும் சமணமும்.. A Jinalaya at Chamraj Nagar, Karnataka.


Article by : John Peter. 

சாம்ராஜ்நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இச்சமணக்கோயில் தற்போது "ஸ்ரீவிஜய பார்த்தவ நந்தஸ்வாமி ஜனபசதி" என வழங்கப்பெற்று நன்முறையில் பராமரிக்கப்பெற்று சமண மதத்தினரால் வழிபாடு நடத்தபட்டு வருகிறது இங்கு காணப்பெறும் இரண்டு கல்வெட்டுகள் இக்கோயிலின் பழமையினை அறிந்து கொள்ள உதவுகிறது. ஹொய்சாள மன்னன் விஷ்ணு வர்தனின் கீழ் போர் மற்றும் அமைதி(Sandhivigrahi)துறையின் அமைச்சராக பணியாற்றிய இரண்டாம் புனிசமய்யா என்பவனின் 1117 ஆம் ஆண்டு கல்வெட்டு மற்றும் கோயிலின் மேற்கு பகுதியிலுள்ள மூன்றாம் வீர நரசிம்மனின் நிலக்கொடை மற்றும் வரிகளை தானமாக வழங்க கூறிய கல்வெட்டுமாகும்.அக்காலத்தில் இந்த ஸ்தலமானது எண்ணெய் நாட்டிலுள்ள அரகொத்தாரா எனவும் இச்சமணக்கோயில் புனிசஜினாலயா எனவும் அழைக்கப்பெற்று வந்த்தையறிகிறோம். புனிசராஜாதண்டதிபா என்றும் புனிசமய்யா என்று குறிப்பிடப்படும் இவர் கட்டியதால் அவரின் பெயர் கொண்டு புனிசஜினலயா என வழங்கப்பட்டதையறிகிறோம். இவர் அமாத்யகுலத்தை சேர்ந்த தீவிர சமணமதத்தினர் என்றும் திரவிடாண்யாவின் அஜித முனிபதி என்ற சமண அடியாரை தன் குருவாகக் கொண்டு பல சமண பசதி( கோயில்) களை எழுப்பியும் பழுதடைந்தவற்றை சீரமைத்து சீரிய பணியாற்றியதை கங்கபாடியில் கிடைக்கும் கல்வெட்டு சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மைசூருக்கருகே பசதி ஹொசகோட்டே என்னுமிடத்தில் மூலஸ்தான பசதி என்னும் கோயிலை இவர் மற்றும் இவரது மனைவி ஜக்கியப்பேவும் இணைந்து எடுப்பித்துள்ளனர். மேலும் ஹொய்சாள அரசின் கீழ் இவரது வமித்தினர் பரம்மரையாக தண்டநாயக்கர்களாக அமைச்சர்களாக பணியாற்றி வந்ததை வம்சாவளியை விவரிக்கும் இக்கல்வெட்டின் துணை கொண்டு அறியலாம் இவரது பாட்டனார் புனிச்சம்பய்யா சாசன- வாசக- சக்கரவர்த்தி என குறிப்பிடப்படுகிறார் மேலும் புனிசய்யா தனது மைந்தனுக்கு பிட்டிகா என பெயர் சூட்டியதிலிருந்து தன் அரசன் பால் வைத்திருந்த பற்றுதலை நாம் புரிந்து கொள்ள முடிகிறது விஷ்ணு வர்தனின் இயற்பெயர் பிட்டிகாதேவனாகும். தனது அரசனுடன் பல்வேறு போர்களின் இணைந்து சீரிய பங்காற்றியவன் தோடர்களையும் கொங்கர்களையும், மலையாளிகளயும் அடக்கி வெற்றி கண்டவன் தனதுஅரசனின் ஆணையின் பேரில்போலுவர்களை அடக்கியதோடு பயல்நாட்டிலும் நுழைந்து வசப்படுத்தினான் என இவனது பராக்கிரமங்களை பார்சவ நாதர் கோயிலிலுள்ள கல்வெட்டு விவரிக்கிறது.

இக்காலத்தில் இச்சமணபசதி மாற்றம் கண்டு பெரும்பாலும் வைணவகூறுகளை உட்கொண்டுள்ளதை காண்கிறோம். பார்சவநாதரின் காவல் தெய்வங்களான யக்ஷ்சன் யக்ஷ்சி மாற்றாக" ஸ்ரீசேத்ரபால குதிரை பிரம்ம தேவர்" சந்நிதி கோயிலின் வலப்புறத்தில் அமைந்துள்ளது தற்காலத்திய கருங்கல்லிலான மான ஸ்தம்பம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது கோயிலின் வெளிப்புற சுவற்றில் கங்கர் காலத்திய கொற்றவை( மஹிஷா) ஒன்றும் சமணர் சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளதை காண்கிறோம்.






















No comments:

Post a Comment